அஞ்சு பாய் கட்டாரியா மற்றும் ஹேம்ராஜ் கட்டாரியா அறக்கட்டளை சார்பில் பெரம்பூர் பகுதியில் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் மற்றும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது!
பெரம்பூர் : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு அஞ்சு பாய் கட்டாரியா மற்றும் ஹேம்ராஜ் கட்டாரியா அறக்கட்டளை சார்பில் குடியரசு தினவிழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, பெரம்பூர், வீனஸ் பூங்கா எதிரில் இதன் நிறுவனத் தலைவரும், நுகர்வோர் உரிமைகள் மற்றும் விஜிலென்ஸ் இயக்கத்தின் மாநில இணைச் செயலாளருமான, மனிதநேயர் முனைவர் உத்தம் சந்த் கட்டாரியா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், செய்தி வாசிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்விற்கு, முன்னாள் தெலுங்கானா – புதுச்சேரிஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார். அவருக்கு விழா குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பூங்கொத்து வழங்கி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினர்.
மேலும், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நமது இந்திய தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், பிரவீன் பர்மார் உத்தம், கமலா பாய் உத்தம் பர்மார், புலவர் சுகுமாரி, தொழிலதிபர் சடகோபன் ராஜு, தனசேகர், ரிஷப் கட்டாரியா, தேவேந்திர குமார், சந்திரசேகர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் முனைவர் உத்தம் சந்த் கட்டாரியா அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினை நடிகரும், சமூக ஆர்வலருமான பிரவீன்குமார் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்திருந்தார்.
மேலும், பள்ளி மாணவர் பேச்சாளர் ஸ்டாலின் பாரதி விவேகமாகபேசியும், மாணவி தீபிகா சிலம்பம் சுற்றியும், சிறப்பாக பேசியும் அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெரம்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு போர்வைகள், விலையில்லா பழ மரக்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.