அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் ரியல் எஸ்டேட் துறையின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் அவருடைய பிறந்த நாளை முப்பெரும் விழாவாக சென்னை வடபழனி கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் அதிவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த மாநாட்டிற்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக செயலாளர் வி. ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். தேசிய குழு பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து, செயலாளர் கிங்மேக்கர் ராஜசேகர், பொருளாளர் சந்திரசேகர், துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . தேசிய செயல் செயலாளார் கோவை செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார் மேலும், இவ்விழாவில் சிறப்புவிருந்தினர்களாக தகவல்அறியும் உரிமை ஆணையர் பிரதாப்குமார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் , ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன், தமிழ் ஆட்சி மன்ற முழுநேர குழு உறுப்பினர் ஜியாவுதீன், நீதியின் குரல் சி. ஆர் .பாஸ்கரன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, திருபோரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள், புரோமோட்டர்கள், தொழிலதிபர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஃபெய்ரா நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியை லே அவுட் குழு ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பாக பானு பிரமோட்டர்ஸ் மேலாண்மை இயக்குநரும் லே அவுட் மாநில பொதுச் செயலாளருமான ராஜா ஃபக்ருதீன் அலி அகமத் நன்றி உரை ஆற்றினார். மேலும், தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மரம் நடும் விழா, சிறார்கள், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் காலை, மதிய, இரவு உணவு என 3 வேளை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறையான சி.எம்.டி.ஏ மற்றும் டீ.டி.சி.பி நகராட்சி நிர்வாகம் , பதிவுத்துறை வருவாய் துறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய துறைகளில் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஃபெய்ரா நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை போன்று இல்லம் தேடி பத்திரப்பதிவு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். குறிப்பாக நகர்புறங்களில் பதிவு செய்யப்படும் முதல் பதிவுகளுக்கு வீட்டுமனை அபிவிருத்தி மற்றும் கட்டுநர்களால் கொண்டு வரப்படும் புதிய குடியிருப்புகள் திட்டங்கள் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு முதன் முதலில் பதிவு செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த ஆவணத்தையும், வழிகாட்டு மதிப்பையும் உறுதி செய்து அனைத்து சட்ட விதிமுறைகளால் ஒப்புதல் பெற்ற பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரில் சென்று இல்லம் தேடி பத்திரப்பதிவு செய்ய வேண்டும் .இப் பத்திரப்பதிவுக்கு சேவை கட்டணமாக ரூ.5000 /-வசூலிக்கலாம். இந்த சேவையின் மூலம் மக்களின் கால விரையம் , வீண் அலைச்சல் குறையும் . அரசு மற்றும் பதிவுத்துறைக்கு பெருமளவு வருவாய் கூடும். ஆகவே, அரசு இக்கோரிக்கையை உடனடியாக ஆவணச் செய்ய வேண்டும்.
யூ.டி.எஸ் என்ற முறையில் அபிவிருத்தி செய்யப்படும் வில்லா கட்டுமான திட்டங்களுக்கு பிற்காலத்தில் வீட்டு உரிமையாளர் சட்டத்திற்கு உட்பட்டு அவருடைய கட்டிடத்தை மட்டும் மாற்றம் செய்ய தனிப்பட்ட முறையில் திட்ட அனுமதி பெற வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் அமல்படுத்தப்பட்ட பின்பு பொதுமக்கள் கட்டிட வரைபட அனுமதி பெறுவதில் மிகுந்த ஆர்மாக உள்ளனர் . எனவே பெருநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நகர கட்டமைப்பு துறைக்கு தேவைக்கேற்ப அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தேவையான அளவு நியமிக்கப்பட வேண்டும்.
கிராமப்பகுதிகளில் கட்டிட அனுமதி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது ஆன்லைன் மென்பொருள் சிக்கல்களால் எளிமையாக விண்ணப்பிக்க முடியாமல் இருக்கிறது. இதுபோன்ற நேர்வுகளில் கையேடு பயன்பாட்டில் விண்ணப்பிக்கும் முறையை அனுமதிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியை போன்று பிற நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஒரு ஏக்கர் வரைக்கும் உள்ள இடங்களை 30 அளவுகள் வரை உட்பிரிவு அங்கீகாரம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் . சென்னை மாநகரில் 3வது முழுமை திட்டம் திட்டமிடுகின்ற பொழுது வெளிவட்டச்சாலை, உள்பட்ட சாலை, புறவழிச்சாலை, திட்டச்சாலை, கட்டச்சாலை (Grid Road) ஆகியவை எங்கு தேவைப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அவற்றைதொலைநோக்குபார்வையோடு உருவாக்கிடுமாறு வேண்டுகிறோம் .
திருநங்கைகள், பழங்குடியினர் குடியிருப்பிற்கு வீட்டுமனை வாங்கும் பொழுது முத்திரை தாள் கட்டணம் , பதிவு கட்டணம் ஆகியவற்றில் தளர்வு வேண்டும் மோசடி பத்திரபதிவு விசாரணை மனுக்களை கையாள போதுமான பணியாளர்கள் இல்லாமல் மனுக்கள் குளறுபடி ஆகிறது எனவே விசாரணையை பதிவு செய்ய மாவட்டந்தோறும் தனி மாவட்ட பதிவாளர்களை நியமிக்கப்பட வேண்டுகிறோம். முதலான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

