ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025 – கண்காட்சியில் கடுமையான ஆபத்தான பகுதிகளுக்காக அதிநவீன தீர்வுகள் அறிமுகம்
சென்னை, இந்தியா- சென்னையில் 6-8, மார்ச் 2025ல் ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025 என்ற கண்காட்சி நடைபெறுகிறது. அதில், கடுமையான, ஆபத்தான தொழில்துறைப் பணியிடங்களைக் கையாள்வதற்கான தீர்வுகளை ஈட்டன் நிறுவனம் காட்சிப்படுத்துகிறது.
சிசிடிவி அமைப்புகள், சிக்னலிங், அலாரம், லைட்டிங், இயந்திரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மின் விநியோகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான அம்சங்களை ஈட்டன் நிறுவனம் காட்சிப்படுத்துகிறது (எம்.டி.எல், சி.இ.ஏ.ஜி, எச்.ஏ.சி தயாரிப்புகள் உட்பட).
மேற்கண்டவற்றை ஈட்டன் நிறுவனத்தின் துணைத்தலைவர் & பொது மேலாளர் (இ.எம்.இ.ஏ-க்ரவுஸ் ஹிண்ட்ஸ், பி-லைன், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஈட்டன்) சைமன் மேத்திஸன், ஈட்டன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் மரின் டிரைவ், ஈட்டன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் பிலிப்ஸ் ஜேக்கப் (பி லைன், எண்ணெய் மற்றும் எரிவாயு) ஆகியோர் இணைந்து இப்புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துவைத்துள்ளனர். முக்கியத் துறைகளுக்கு நவீனமான உள்ளூர் தீர்வுகளை வழங்குவது ஆகியவற்றில் ஈட்டன் நிறுவனத்துக்கு உள்ள உறுதிப்பாட்டை இவர்கள் அந்நிகழ்ச்சியில் விளக்கினர்.
.
“தொழில் நிறுவனங்களின் சவால் மிகுந்த அமைவிடங்களில் அவற்றின் பாதுகாப்பு, செயல்திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் தீர்வுகளை ஈட்டன் நிறுவனம் வழங்குகிறது. தொழில்துறை வளரும்போது சிறப்பான, நீடித்து உழைக்கக்கூடிய, உள்ளூர் தீர்வுகளுக்கான தேவை அதிகரிக்கவே செய்யும்” என்றார் ஈட்டன் இந்தியா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் பிலிப்போஸ் ஜேக்கப் (கிரவுஸ் ஹிண்ட்ஸ், பி-லைன், எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு).
“நாங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு உயர் தரமான பாதுகாப்பு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவை தேவை என்பதால் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இவ்விஷயத்தில் நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். உள்ளூர் மற்றும் உலகச் சந்தையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு எங்களின் உற்பத்தி மற்றும் பொறியியல் திறனைப் பயன்படுத்தி தீர்வுகளை அளிக்கிறோம். இது, ’மேக் இன் இந்தியா’ (முழுக்க இந்தியத் தயாரிப்பு) எனும் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார் அவர்.
ஈட்டன் நிறுவனம், மின் பாதுகாப்பு, தொழில்துறையில் வெடிப்பு மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றில் 110 ஆண்டு கால அனுபவம் மிக்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அண்மையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஈட்டன் கையொப்பமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அதன் கிரவுஸ் ஹிண்ட்ஸ், பி-லைன் பிரிவுகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலமாக ஈட்டனின் டிஜிட்டல் மயமாக்கல், மின் மயமாக்கல், ஆற்றல் பகிர்மானம் ஆகியவை மேம்படுத்தப்படும். இதன் வாயிலாக உலக வர்த்தக செயல்பாடுகளில் இந்தியாவின் பங்கு மென்மேலும் உறுதிப்படுத்தப்படும்.
காட்சிப்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்களில் சில:
● மின்சார பாதுகாப்பு சாதனங்கள் (MTL Zone Guardian AC/DC Surge Protection Devices): புதுப்பிக்கத்தக்க எரியாற்றல், மின்சார வாகன சார்ஜிங், தொழிற்சாலை பயன்பாடுகள் ஆகியவற்றில் அதிக மின்சாரம் பாய்வதைக் கட்டுப்படுத்தும் வகையிலான அமைப்பு (Advanced SPD).
● சிசிடிவி தீர்வுகள், வெடிப்பு விபத்துகளால் பாதிக்கப்படாத பி.டி.இசட் கேமராக்கள் (EPIK Series Explosion-Protected PTZ Cameras), எடை குறைந்த, நீடித்து உழைக்கக்கூடிய, ஆபத்து மிகுந்த- தொழிலகத்துக்கு வெளியே உள்ள பணியிடங்களிலும் ஹாட் பிளக்கபிள் ( இயந்திரங்கள் இயக்கத்திலிருந்தாலும் மின் இணைப்பைத் துண்டிக்கவோ இணைக்கவோ வசதியான சாதனங்கள்) கருவிகள், வீடியோ நிர்வாக மென்பொருளான ஹெர்னிஸ் (HERNIS).
● ஹார்ட் ஓவெர் ஈதர்நெட் மல்டிபிளக்ஸர்- பல்வேறு பணித்தளங்களில் உள்ள சாதனங்களை முக்கிய கட்டுப்பாட்டு மென்பொருளுடன் தங்கு தடையின்றி இணைப்பது (இதன்மூலம் தடங்கல் இல்லாத இயக்கமும் எளிதான நிர்வாகமும் சாத்தியப்படும்) தொடர்பான செயல்முறைகள்.
● சி.இ.ஏ.ஜி (CEAG) – தொழிலகங்களில் விளக்கு அமைப்புகள், மின்சார விநியோகம் மட்டும் கட்டுப்பாடு.
இத்துறையில் முன்னணி வகிக்கும் ஈட்டன் நிறுவனத்தின் தீர்வுகளை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத்-2025ல் அரங்கம் 1 ல் பி-11 என்ற அரங்கில் பார்வையாளர்கள் பார்க்கலாம். பாதுகாப்பு, செயல்திறன், நம்பகத்தன்மை மிக்க தொழில் செயல்பாடுகள் ஆகியவற்றையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு ஈட்டன் செயல்படும் விதத்தை அங்கு புரிந்துகொள்ளலாம்.
ஈட்டன், திறன்மிக்க ஓர் ஆற்றல் மேலாண்மை நிறுவனம் ஆகும். உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் இது செயல்பட்டு வருகிறது. டேட்டா சென்டர், பயன்பாடு, தொழில் துறை, வணிகத்துறை, கருவிகள் உற்பத்தி, குடியிருப்புகள், விமான உற்பத்தி, போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான சாதனங்களை ஈட்டன் தயாரித்து வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் எரி ஆற்றலை இன்றும் என்றும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும் நீடித்த செயல்பாட்டுக்கும் உதவ வேண்டும் என்பதே ஈட்டனின் வணிகக் கோட்பாடு ஆகும். அதுதான் ஈட்டனின் வழிநடத்தும் சக்தி ஆகும். உலகெங்கும் மின் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் வளர்ச்சிப்போக்கை ஈட்டன் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. எங்கு பார்த்தாலும் எரிசக்தி மேலாண்மை பெரிய பிரச்சனையாக இருப்பதால் தற்போது உலகமே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதனை விரைவுபடுத்தவும், நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு நிலைத்த தன்மை மிக்க வாழ்க்கையை அளிக்கவும் ஈட்டன் செயல்படுகிறது.
1911 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஈட்டன் நிறுவனம், தனது துறையின் வளர்ந்துவரும் விரிவான தேவைகளுக்கேற்ப தன்னை வளர்த்துக்கொண்டு சேவையாற்றிவருகிறது. 2024 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ள இந்நிறுவனத்துக்கு 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு. www.eaton.com. என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். LinkedIn.
தளத்தையும் பின் தொடரலாம்.



