மூளை முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம்!
• சென்னையில் இச்சாதனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்
சென்னை , 23 ஏப்ரல், 2025: காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர். V நாராயணன், காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு O-ARM அறுவைசிகிச்சை சாதனத்தை தொடங்கி வைத்தார்.
செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்படும் 2D மற்றும் 3D இமேஜிங் வழியாக இயங்கும் O-Arm சாதனம், மிக அதிக துல்லியத்துடனும், பாதுகாப்புடனும் அதிக சிக்கலான மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை செயல்முறைகளை திறம்பட மேற்கொள்ள அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சையின்போது நிகழ்நேர இமேஜிங் (படங்கள்) -ஐ இது வழங்கி துல்லியமான முடிவு எடுப்பதற்கும் சிறப்பான திசையமைவுக்கும் உதவுகிறது; செயற்கை சாதனங்களை சரியாக பொருத்துவதை உறுதி செய்யும் திறனையும் மற்றும் உடனடியாக முதுகுத்தண்டு ஒத்திசைவையும் இது உறுதி செய்யும். இதில் அமைந்துள்ள மிக நவீன மொபைல் இமேஜிங் செயல்தளமானது, அறுவைசிகிச்சையின்போது 360 டிகிரி சிடி போன்ற தோற்றப்படங்களை வழங்குகிறது. அறுவைசிகிச்சை செய்யும் உடற்பகுதியின் மீது முழுமையான தோற்றக்காட்சியை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இது வழங்குவதால் நிகழ்நேரத்தில் தகவலறிந்த நிலையில் முடிவுகளை எடுக்கும் அவர்களின் திறனை மேம்படுத்துகிறது. உடலுக்கான ஒரு ஜிபிஎஸ் போன்ற கருவியான ஸ்டெல்த்ஸ்டேஷன் நேவிகேஷன் என்பதுடன் இச்சாதனம் நேர்த்தியாக ஒருங்கிணைகிறது; மிக நுட்பமான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையின்போது ஸ்குரூக்கள் மற்றும் செயற்கை இம்பிளாண்ட்கள் மிகத் துல்லியமாக பொருத்தப்படுவதை இச்சாதனம் உறுதி செய்கிறது.
சென்னை, காவேரி மருத்துவமனையின் மூளை & முதுகுத்தண்டிற்கான அறுவைசிகிச்சை தலைமை நிபுணரும், நரம்பு அறிவியல் துறையின் இயக்குநருமான டாக்டர். ரங்கநாதன் ஜோதி, O ARM சாதனம் குறித்து பேசுகையில், “மூளை-நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்களான நாங்கள், மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அடிக்கடி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்கிறோம்; இதில் துல்லியம் என்பது வெறுமனே முக்கியமானது மட்டுமல்ல; துல்லியம்தான் அனைத்துமே. நாங்கள் அறுவைசிகிச்சை செய்யும்போது உடல் அமைப்பை மிகத்தெளிவாகவும், விரிவாகவும் காண்பதற்கு O ARM எங்களுக்கு உதவுகிறது. சிகிச்சையின் விளைவில் கணிசமான மாற்றத்தை இது செய்கிறது. கையில் ஒரு 3D படத்தை வைத்துக் கொண்டு அறுவைசிகிச்சையை செய்வது போன்றது இது. சிக்கலான முதுகுத்தண்டு ஊனத்தை சரிசெய்தல், புற்றுக்கட்டிகளை வெட்டி அகற்றுதல் மற்றும் மிக குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள் ஆகியவற்றை இந்த O-ARM சாதனத்தின் மூலம் அதிக துல்லியத்தோடும், நம்பிக்கையுடனும் இப்போது செய்ய முடியும். இது வெறுமனே ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; எமது நோயாளிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கவசம் என்றே இதைக் கூறலாம். சென்னையில் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையில் ஒரு மாபெரும் பாய்ச்சலை இது குறிக்கிறது” என்று கூறினார்.
ரேடியல் சாலை காவேரி மருத்துவமனையின் மூளை & முதுகுத்தண்டிற்கான காவேரி மையத்தின் இயக்குநரும், நரம்பு அறிவியல் துறையின் குழு வழிகாட்டியுமான டாக்டர். கிரிஷ் ஶ்ரீதர் பேசுகையில், “எந்தவொரு மூளை நரம்பியல் மருத்துவச் செயல்முறையின் மைய அம்சமாக இருப்பது நோய்க்கு தீர்வுகாணும் அதே வேளையில் மூளை நரம்பியலின் இயக்கத்தை பாதிப்பின்றி நீடிக்கச் செய்வதற்கான தேவையாக இருக்கிறது. இந்த சமநிலைக்கு மிக நுட்பமான, நேர்த்தியான கருவிகள் தேவைப்படுகின்றன. ஸ்டெல்த் நேவிகேஷன் வசதி கொண்ட O-ARM, அறுவைசிகிச்சைகளை நாங்கள் திட்டமிடுகிற மற்றும் செயல்படுத்துகிற முறையில் மேம்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நிகழ்நேரத்திலேயே அறுவைசிகிச்சையை அகக்கண்வழியாக காணவும், அறுவைசிகிச்சைக்கான பாதையை கடந்து செல்லவும் மற்றும் உறுதி செய்யவும் தேவையான திறனை இது எங்களுக்கு வழங்குகிறது. நோயாளிகளை பொறுத்தவரை, குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள், குறைவான இடர்கள் மற்றும் விரைவாக குணமடைதல் ஆகிய ஆதாயங்கள் இதனால் சாத்தியமாகின்றன. இச்சாதனத்தை அறிமுகம் செய்வதில் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெறுவதற்கும் கூடுதலாக சரியான நடவடிக்கையை எடுப்பது என்பதாகவே இந்நடவடிக்கை அமைகிறது. சென்னையிலேயே இந்த மிக நவீனமான, நோயாளியின் நலனை மையமாகக் கொண்ட நரம்பியல் அறுவைசிகிச்சை சேவையை கிடைக்குமாறு செய்வதற்கு எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நடவடிக்கையாக இது இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையில் ஒரு மில்லி மீட்டர் அளவுகூட மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். O-ARM-ன் 3D இமேஜிங் மற்றும் நிகழ்நேர பின்னூட்ட தகவல் வசதிகளானது, நிகரற்ற துல்லியத்துடன் அறுவைசிகிச்சையை நாங்கள் செய்வதற்கு கூடுதல் திறனை வழங்குகிறது. எமது நோயாளிகளுக்கு, பாதுகாப்பான அறுவைசிகிச்சைகள், மயக்க மருந்தின் கீழ் குறைவான நேரமே இருப்பது மற்றும் விரைவாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவது என்ற ஆதாயங்கள் இதில் கிடைக்கின்றன. அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இச்சாதனம் ஒரு சிறப்பான வரமாகவே இருக்கிறது” என்று ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஷியாம் சுந்தர் கூறினார்.
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். G பாலமுரளி இத்தொழில்நுட்பம் குறித்து கூறியதாவது: “முதுகுத்தண்டின் நுட்பமான, மென்மையான பாகமாக முதுகுத்தண்டு இருப்பதால் அறுவைசிகிச்சையில் ஏற்படும் ஒரு மிகச்சிறிய பிழையும் கூட நோயாளிக்கு நீண்டகால பாதிப்பை விளைவித்து விடும். அத்துடன் சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளால் அவர்களாகவே எழுந்து நடமாட முடியுமா அல்லது அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும், அச்சமும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையோடு எப்போதும் சேர்ந்தே எழுகிறது. இந்நாட்டில் வெகு சில மையங்களே இந்த O-ARM சாதனத்தைக் கொண்டிருக்கும் நிலையில் இதனை சென்னையில் அறிமுகப்படுத்தும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை பெறுகிறது. உலகில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த தொழில்நுட்பம் இதுவே; செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் உணர்வு விரிவாக்கத்துடன் கூடிய ரோபோடிக் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைக்கு இது நிகரானதாகும்”.
முதுகுத்தண்டு பராமரிப்பில், தண்டுவட இணைப்பு அறுவைசிகிச்சைகள், பக்க வளைவுகளை சரிசெய்தல், இடைத்தட்டுகளை மாற்றுதல், புற்றுக்கட்டிகளை அகற்றுதல் போன்றவற்றிற்கான சிகிச்சைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மூளை-நரம்பியல் அறுவைசிகிச்சையில், ஆழமான இடத்திலிருக்கிற மூளைப் புண்கள், மூளைக் காயம், மண்டையோட்டின் அடிப்பகுதியில் பழுதுநீக்கல்கள் ஆகியவை தொடர்பான அறுவைசிகிச்சைகளுக்கு ஆதரவளிக்கிறது. எலும்பியல் சிகிச்சைகளில், இடுப்புக்கூடு எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சைகளிலும், சிக்கலான எலும்பு மறுக்கட்டமைப்புகளிலும், மூட்டுகளில் திருத்தங்கள் செய்வதற்கும், எலும்பு புற்றுநோய்களை துல்லியமாக அகற்றுவதற்குமான சிகிச்சைகளிலும் இது உதவுகிறது.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை-நிறுவனரும், செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இது குறித்து கூறியதாவது: “நோயாளிகளின் பாதுகாப்பே எமது முதன்மையான முன்னுரிமையாக எப்போதும் இருந்து வருகிறது. நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இந்த பொறுப்புறுதியே அடிப்படை காரணமாக இருக்கிறது. சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் O-ARM அறுவைசிகிச்சை சாதனத்தின் மூலம், நோயாளியின் நலனை முதலிடத்தில் வைக்கும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அறுவைசிகிச்சையின் துல்லியத்தை இச்சாதனம் மேம்படுத்துகிறது, இடர்வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் அறுவைசிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் காலஅளவை கணிசமாக மேம்படுத்துகிறது. சென்னையில் ஸ்டெல்த் நேவிகேஷன் உடன் கூடிய O-ARM சாதனத்தை அறிமுகம் செய்திருப்பதன் வழியாக இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய அதிக பாதுகாப்பான, அதி நவீன சிகிச்சை பராமரிப்பு எமது நோயாளிகள் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கத்துடன் கனிவான சிகிச்சையையும், ஒருங்கிணைத்து வழங்கும் எமது இலட்சியத்தையும், குறிக்கோளையும் இச்சாதனத்தின் அறிமுகம் வலுவாக எடுத்துக் கூறுகிறது.”