ஜெபமலர் ஊழியத்தின் சார்பாக 50வது ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஜெபமலர் ஊழியத்தின் சார்பாக 50வது ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஜெபமலர் ஊழியத்தின் போதகர் கோயில் பிள்ளை ஏற்பாட்டில் 100 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கிறிஸ்துமஸ் பெருவிழா அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜெபதாஸ் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதகர் வில்சன் நற்செய்தியினை வழங்கினார். ஜெபமலர் ஊழியத்தின் போதகர் கோயில்பிள்ளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் பொறுப்பாளர் சூர்யகலா தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய பன்மொழிகளில் பாடல்கள் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

இந்நிகழ்ச்சி குறித்து ஜெபமலர் ஊழியத்தின் போதகர் கோயில்பிள்ளை தெரிவித்ததாவது:-

நான் 8 ஆம் வகுப்பு வரை தான் படித்தேன். பின்னர் பல தடைகளுக்குப் பிறகு ஏம்.ஏ முதுநிலை பட்டபடிப்பை முடித்தேன். பின்னர் அரசுப்பள்ளியில் ஆசிரியரானேன். அன்றிலிருந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை ஜெபமலர் ஊழியத்தின் மூலம் செய்து வருகிறேன். குறிப்பாக கடலை மிட்டாய் விற்பனையை ஊக்கமளித்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்கள் சுயசார்புடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெற ஜெபமலர் ஊழியம் உதவிகரமாக செயல்படுகிறது  என்றார்.

Faceinews.com